நடிகனை கடவுளாக நினைக்கும் ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருக்கலாம்..ஆனால் ரசிகனை உடன்பிறப்பாக நினைக்கிற நடிகர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?
“நான் இருக்கிறேன்” என்கிறார் சிம்பு.
“நடிகனை உயர்த்திப் பிடிப்பவர்கள் ரசிகர்கள்தான்! அவர்கள் இல்லையென்றால் நடிகர்களின் திரை உலக வாழ்க்கை இரண்டொரு படங்களுடன் முடிந்து விடும். “என்றார் .
இவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர் மதன் .சென்னை தேனாம்பேட்டை. இவருக்கும் அதே பகுதியைச்சேர்ந்த விடுதலை சிறுத்தைக் கட்சியினர் சிலருக்கும் பேனர் வைப்பதில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதனால் மதனை ஆயுதம் கொண்டு தாக்கியதில் இறந்து போயிருக்கிறார்.
கேள்விப்பட்டதும் டி ராஜேந்தர், நடிகர் மகத், மற்றும் சிம்புவின் நண்பர் ஹரி,மற்றும் மன்றத்தினர் மதனின் இறுதி சடங்குகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
படுகொலை நடந்தபோது சிம்பு துபாயில் இருந்ததால் அவரால் வர இயலவில்லை. நேற்று வந்தவர் தனது ரசிகருக்கு போஸ்டர் அடித்து அதை அவரே தெருவில் ஒட்டி தனது அஞ்சலியை தெரிவித்திருக்கிறார்.
இதற்கு நடிகர் விவேக் தன்னுடைய கருத்தை டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
“தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய இந்த சிம்புவை என்ன சொல்ல?
இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு,காலம் தவறாமை, இவை பழகினால் மீண்டும் உயர்வார் அவர் இடம் அப்படியே திரை உலகில் இருக்கிறது.”
இவ்வாறு கூறி இருக்கிறார்.