தமிழ்த்திரையுலகில் தனி ஒருவன் மூலம் மறுபிரவேசம் செய்து கலக்கி வரும் அரவிந்த்சாமியின் நடிப்பில் சமீபத்தில், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம்வெளியானது.இந்நிலையில், இது வரை தன் பர்சனல் விசயங்களை பொதுவெளியில் பகிராதவர், தற்போது கிட்டதட்ட சின்ன அரவிந்த்சாமியாக ,இளம் ஹீரோவாகவே காட்சியளிக்கும் தன் மகனின் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். சர்வதேசப் படிப்பான ஐ.பி.ப்ரோகிராமில் படித்து பட்டம் பெற்றுள்ள மகனை வாழ்த்தியும் அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, ‘ஐ.பி ப்ரோகிராமில் படித்து பட்டம் பெற்றுள்ள என் மகனை பார்த்து பெருமைப் படுகிறேன்.இந்த மைல்கல்லை அடைந்தற்கு உனக்கும் சக மானவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.உன் வாழ்க்கையை நேர்மையான,கொள்கை படிப்புடன்,மகிழ்ச்சியாக அன்பு மற்றும் அமைதியுடன் வாழவேண்டும்.உலகிற்கு பயன் உள்ளவனாக வாழ்.லட்சியத்தைநோக்கி கனவு காண் ,நிச்சயம் பலிக்கும்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.அவருக்கும், அவரது மகனுக்கும் டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.