மீன் பிடிக்கணும்னு சேத்துக்குள்ள இறங்கின பிறகு உடம்பெல்லாம் சேறு ஆகுதே,விரால் மீன் கிடைக்கலியேன்னு கவலைப்பட்டால் பிறகெப்படி மீன் குழம்பு கிடைக்கும்? பொறுமையா சந்து ,பொந்துன்னு பார்க்காம கைய விட்டா குறவை மீனாவது மாட்டும்ல?
அப்படி மாட்டியவர்தானா பிரியா ஆனந்த்?
பலவிதமான செய்திகள், புகைப்படங்கள் என பரபரப்பான செய்திகளில் வந்து போனவர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடி ஆகி இருக்கிறார் .
படத்தின் பெயர் எல்கேஜி .
எத்தனை நாளைக்குத்தான் ஒத்து ஊதிக்கொண்டே இருப்பது, நாமும் வித்துவான்தான் என்று நாதஸ்வரம் பிடித்திருக்கிறார் பாலாஜி. சத்தம் போட்டே நாலு ஊரைக் கூட்டுகிறவர் கையில் அரசியல் படம் மாட்டி இருக்கிறது.யாரையெல்லாம் கிழிக்கப்போகிறாரோ ?
“இந்தாளு கையில் எப்படி சிக்கினார் பிரியா ஆனந்த்?
“அண்மையில்தான் நாங்கள் பிரண்ட்ஸ் ஆனோம்.வித்தியாசமான ஆளு. ஒருநாள் போன் பண்ணி அவரோட நடிக்கனும்னு கேட்டார். ஆச்சரியமா இருந்தது.த யக்கமாகவும் இருந்தது, தர்மசங்கடம்தான் .கதையை கேட்டேன்
பிடிச்சிருந்தது.உடனே ஒகே சொல்லிட்டேன்.” என்கிறார் பிரியா.
“அவரோடு லவ்னு சொல்வது?”
“உடனே கதையை கட்டி விட்ருவீங்களே! அப்படியெல்லாம் இல்லிங்க?”
சரி சரி…கரையான் கட்டுன புற்றுக்குள்ள பாம்பு நுழையாம இருந்தால் சரிதான்!