மேலாண்மை வாரியமா வேணும். உச்ச நீதி மன்றம் சொல்லிட்டா கொடுத்திருவமா? காவி வேட்டி கட்டிக்கிட்டு கமண்டலம் இல்லாம திரியிறது எதுக்காக? எல்லாம் வசதிக்காகத்தான்வே.! வேட்டியை உருவி தண்ணீர்ல நனைச்சு கழுத்தை இறுக்கி மூச்சை நிப்பாட்டிட மாட்டமா ,என்று ஒரு பக்கம் மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது.
“கண்ணா ,,,அவங்க சொல்லிட்டுப் போகட்டும் நமக்குத் தேவை .விவசாயத்துக்கு தண்ணி. தஞ்சை காஞ்சு போனா தமிழ்நாட்டு ஜனங்களுக்கு உணவுப் பஞ்சம் வந்துரும். கன்சிடர் பண்ணுங்க குமாரசாமி” என்று சூப்பர் ஸ்டார் சொன்னதற்கு முதல்வராக பதவி ஏற்கவிருக்கிற குமாரசாமி சொல்லி இருக்கிற பதில்.
“ரஜினி சார்! வாங்க. வந்து பாருங்க, அணைக்கட்டு நிலவரங்களை நீங்களே பாருங்க. கர்நாடக விவசாயிகளையும் பாருங்க, இதுக்கு அப்புறமும் தண்ணீர் வேணும்னு கேட்டால் பேசத்தான் வேணும்”
தண்ணீர் வருமா சாரே!