சென்னை–28’ படதின் மூலம் தமிழ்சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கியவர் நடிகை விஜயலட்சுமி.. இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் என்கிற அடையாளத்தை விட, சென்னை-28 படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. தொடர்ந்து ‘அஞ்சாதே’, ‘கற்றது களவு’ வெண்ணிலா வீடு ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். இருந்தாலும் பட வாய்புகள் என்பது இவருக்கு குதிரை கொம்பாகத் தான் இருந்து வருகிறது. இதனால் நடிப்பை மூட்டை கட்டி வைத்து விட்டு திரையுலகில் தயாரிப்புத்துறையில் இறங்கி சாதிக்கவேண்டும் என முடிவு எடுத்துள்ளாராம் .தற்போது, படங்களில் நடிப்பதைதடாலடியாக நிறுத்திவிட்டு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அந்நிறுவனத்திற்கு ‘டீ டைம் டாக்ஸ்’ என பெயர் சூட்டியும் உள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார் விஜயலட்சுமி./