தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகியாக கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருபவர் திரிஷா. இவருக்கும் தெலுங்கு நடிகர் ரானாவிற்கும் காதல் என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்றும் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. திடீரென இருவருக்கும் இடையே காதல் முறிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின..இந்நிலையில், தொழிலதிபரும் படத் தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் கடந்த ஜனவரி 23-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணம் எப்போது என்பதை இருவரும்அறிவிக்காமல் வைத்திருந்தார்கள்.இந்த நிலையில் த்ரிஷாவை நாயகியாக வைத்து புதிய படம் எடுக்கப் போவதாக அறிவித்தார் வருண் மணியன். ஆனால் ஜெய் கதாநாயகனாக நடிக்கும் அ ந்தப் படத்திலிருந்து தான் விலகிவிட்டதாக திடீரென அறிவித்தார் த்ரிஷா. இதையடுத்து அவருக்கு பதில் வேறு நடிகையையும் அறிவித்துவிட்டார் வருண் மணியன். எதற்காக விலகினார் என்பது மட்டும் கடைசி வரை தெரியாமலே இருந்தது.இந்த நிலையில்தான் திரிஷா- வருண் மணியன் இடையே கடும் மோதல் ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.. இந்த மோதல்தான் வருண் மணியன் தயாரிக்கும் படத்திலிருந்து த்ரிஷா விலகக் காரணம் என்றும் கூறப்படுகிறது. மேலும், முன்பெல்லாம் விருந்து நிகழ்ச்சிகளில் வருண் மணியனுடன் ஜோடியாக கலந்துகொள்ளும் த்ரிஷா .இப்போது தனியாகவே வருகிறாராம். வருண் மணியனின் குடும்ப நிகழ்ச்சியொன்றில். அவருடைய உறவினர்கள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால் த்ரிஷா மட்டும் இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டார் திரிசா. இநநிலையில், தனது நிச்சயதார்த்த மோதிரத்தையும் கழற்றி விட்டதாக கூறப்படுகிறது .இதைத் தொடர்ந்து இருவரின் நிச்சயதார்த்தமும் நடக்கவிருந்த திருமணமும் முறிந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது, இருவரையும் சமாதானப்படுத்த இரு குடும்பத்தாரின் நண்பர்கள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.