சென்னை-28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் விஜயலட்சுமி. இதை தொடர்ந்து இவர் அஞ்சாதே, அதே நேரம் அதே நிமிடம் போன்ற சில படங்களில் நடித்தார்.இவர் நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து வந்தார். இருவரது காதலுக்கு அகத்தியன் சம்மதம் தெரிவிக்கவே வரும் செப்டம்பரில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். இத்தகவலை விஜயலட்சுமியின் தங்கை நிரஞ்சனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.விஜயலட்சுமி தற்போது படம் தயாரிப்பு பணியில் இறங்கவுள்ளாராம். இவரின் முதல் படம் ஜுலை மாதம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.