கலையரசனுக்கு தன்சிகா. பிரசன்னாவுக்கு சிருஷ்டி டாங்கே என ஜோடி பிரித்து சற்று அவர்களை பைக்கிலும் சுற்ற விட்டு கடைசியில் சோலியை முடித்து விடுகிறார்கள். முன் பகை என கலையரசன் ஜோடி காலி. , அப்பனுக்கு பிடிக்கவில்லை என்று பிரிக்கப்பட்ட பிரசன்னா ஜோடியில் சிருஷ்டி எஸ்கேப். பலி ஆடு பிரசன்னா. இரண்டு பேர் காதலும் காலி . இது கதையின் சுருக்கம்
.எங்கே சுப்பிரமணியபுரம் நினைவுக்கு வந்து விடுமோ என்கிற பயமும் அறிமுக இயக்குநர் எம்.நாகராஜனுக்கு இருந்திருக்கு. இதனால் கதையில் பட்டி தட்டி டிங்கரிங் வேலையும் செய்திருக்கிறார்கள். மதுரையை சுற்றுகிற கதை என்றால் அரசியல்,அருவாள் இல்லாமல் இருக்குமா? பெண் மேயர் ஒரு கொலைக்கு காரணமாக இருக்கிறார்.!நல்லவர்களே பதவிக்கு வரமாட்டார்களா?சினிமாவில் பார்த்தாவது ஆறுதல் அடையலாம் என்றால் அங்கும் அடைத்து விடுகிறார்கள்.
பிரசன்னாவுக்கு ஆட்டோமொபைல் கம்பெனி வேலை. நல்லமனிதர் .வழிந்து காதலிக்கும் சிருஷ்டி டாங்கே .இவர்களின் காதலில் அழகு இருக்கிறது. ஆனால் பிளவுக்கான காரணம்தான் வரண்டுபோன வைகையாகி விட்டது. பிரசன்னாவுக்கு கெஸ்ட்ரோல் மாதிரி. படம் முழுக்க கலையரசன் தன்சிகா ஆதிக்கம்தான்!இருவரது உழைப்பும் கடுமையானது. அதிலும் தன்சிகா காலேஜுக்கு போவதும் நடந்து வருவதும் வியர்வை சிந்தி இருக்கிறார்.!
ஒளிப்பதிவாளர் சந்தோஷ். ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு இருவரும் அவரவர் கடமையை செவ்வனே செய்திருக்கிறார்கள். இதுவரை யாரும் தொடாத ஆரப்பாளையம் ஏரியாவில் இருவரும் செம பரேடு !அருமை.
ஜஸ்டின் பிரபாகரன் இசையாம். ஓ அப்படியா?
கலையரசனும் அவரது நண்பராக வருபவரும்தான் நினைவில் நிற்கிறார்கள்.
காலக்கூத்து-விதியின் விளையாட்டு!