இந்தியா முழுமையும் நன்கு அறியப்பட்ட உண்மையான உச்ச நடிகர் அமிதாப்பச்சன்தான்! எழுபது வயது கடந்தும் இன்னும் திரை உலகம் இவரை விடுவதாக இல்லை. தகுந்த கேரக்டர்களை உருவாக்கி நடிக்க வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது,
விளம்பரப் படங்களும் இந்த உயர்ந்த கிழவரை விடவில்லை.
தனது மகளுடன் நடித்து வருகிறார் ஒரு விளம்பரப்படத்தில்!
“மகள் ஸ்வேதாவுடன் நடித்த அனுபவம் எப்படி?”
“என்னுடன் முதன் முதலாக ஸ்வேதா விளம்பர படத்தில் நடிக்கிறார். மிமிக்ரி செய்வதில் படுசுட்டி.வீட்டில் அமர்க்களமாக இருக்கும். ஆனால் கேமராவுக்கு முன்பாக நின்று விட்டால் அந்தந்த கேரக்டர்தான்! மற்ற நடிகர்களுடன் எந்த மாதிரி பேசிப்பழகுவோமோ அதே மாதிரிதான் ஸ்வேதாவுடனும்!
அவருக்கு கேமரா அனுபவம் கம்பர்ட்டபிளாக இருக்கா இல்லையா என்பதை அவர்தான் சொல்லணும்.சில ஐடியாக்கள் சொல்லலாம். ஆனால் அவங்க ஏத்துக்குவாங்களா இல்லியா என்பது நமக்கு தெரியாது. அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை” என சிரிக்கிறார்.
சார் ,,நீங்க மோடிக்கே அட்வைஸ் பண்ணலாம் !