தமிழ்ச்சினிமா உலகில் முரட்டுத்தனமான இயக்குநர் என கருதப்படுகிறவர் வேலு பிரபாகரன், அதாவது அவரது கொள்கையில் முரட்டுத்தனமான பிடிப்புஉள்ளவர்,யாருக்காகவும் சமரசம் ஆவதில்லை..
பெரியாரை உண்மையாக பின்பற்றக்கூடிய மனிதர். தள்ளாத வயதிலும் தந்தை பெரியாருக்கு மணியம்மையார் உதவி தேவைப்பட்டது. இவரும் இளம் வயது பெண்ணை மணம் செய்து கொண்டிருக்கிறார்.அவருக்கும் தனது படைப்புகளில் பங்களிக்கிறார்.
கடவுள்.2 என்பது இவரது புதிய வம்பு.
யார் யாரை வம்பு இழுக்கப்போகிறாரோ படம் வந்த பிறகுதான் புரியும்! இவரது நியாயமான கேள்விகளுக்கு கடவுள் பதில் சொல்வாரா, தணிக்கைக்குழுவின் கத்திரியில் இருந்து தப்புவாரா என்பது இனிதான் தெரியவரும்.