ஷங்கர், அமீர், ராஜேஷ், எஸ்.பி.ஜனநாதன் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ள ஜீவா, ‘ஈ’ படத்திற்கு பிறகு நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படம் “திருநாள்”. கடந்த சில மாதங்களாக பல கதைகளை கேட்டும் திருப்தியடையாத ஜீவாவை, இப்படத்தின் கதை வெகுவாக கவர்ந்ததால், உடனடியாக இப்படத்தின் படப்பிடிப்பை துவங்குமாறு இயக்குனரிடம் கூறியுள்ளார். மேலும், ‘தெனாவட்டு’ படத்திற்கு பிறகு, இப்படத்தில் தான் கிராமத்து இளைஞனாக ஜீவா நடிப்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா, இப்படத்தின் கதையை கேட்ட உடனேயே நடிக்க சம்மதம் தெரிவித்து,தான் நடித்து வரும் மற்ற மடங்களின் கால்ஷீட் தேதிகளை அட்ஜெஸ்ட் செய்து இப் படத்திற்காக வழங்கியுள்ளாராம்.
நகைச்சுவையும், காதலும், ஆக்சனும் சரிவிகிதத்தில் கலந்த இப்படத்தைபி.எஸ்.ராம்நாத் இயக்குகிறார். “திருநாள்” படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் கும்பகோணத்தில் நடைபெற உள்ளது. இதற்கென கும்பகோணத்தில் பிரம்மாண்டமான ‘ செட் ‘ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை, .எம்.செந்தில்குமார் தனது “கோதண்டபாணி பிலிம்ஸ்” பட நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை மகேஷ் முத்துசாமி கவனிக்க,ஸ்ரீ இசையமைக்கிறார்.