தனுஷின் ஹாலிவுட் கணக்கு ஒரு பக்கிரியின் வித்தியாசமான பயணத்தில் துவங்குகிறது, இந்த மாதம் 30 -ம் தேதி படம் ரிலீஸ். இவரது தயாரிப்பான ‘காலா ‘ ஜூன் ரிலீஸ். சேலம் ஏரியாதான் கொட்டிக்கொடுத்து காலாவை வாங்கி இருக்கிறது.செவன் ஜி சிவாதான் பெரிய விலை கொடுத்திருக்கிறார். இந்தி,தெலுங்கு,என அந்த மொழிகளின் ஏரியாவும் அதிக விலைக்குப் போய் இருக்கிறது.
ஆனந்த் எல்.ராய்,கார்த்திக் சுப்புராஜ்,ஆகியோர் இயக்கத்திலும் வி.ஐ.பி.3 படத்திலும் தனுஷ் நடிக்கிறார். இவரது படத்துக்கு அனிருத் இசை அமைத்து மறுபடியும் கூட்டணி சேருகிறார்கள் என்பது சிறப்பு செய்தி.