கர்வத்தை இன்னும் மண்டையில் ஏற்றிக் கொள்ளாத ‘சில’ நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.
சொந்தமாக படம் எடுக்கும் நிலைக்கு உயர்ந்து விட்ட இவருக்கு பெண்கள் மத்தியில் நல்ல கிரேஸ். தமிழ்நாட்டின் டாப் பைவ் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.
நம்பிப் பணம் போடலாம் கையைக் கடிக்காது என்று தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள். நயன்தாரா,ரகுல்பிரீத் சிங் ஆகியோருடன் அடுத்தடுத்து படம் பாணி வருகிறார் சிவா. இவரது தயாரிப்பான ‘கனா’ தயார் நிலையில் இருக்கிறது.
மற்றொரு மகிழ்ச்சியான செய்தி டிவிட்டரில் இவரது ரசிகர்கள் ஐந்து மில்லியன்.!