மேதகு தமிழ்த் தேசியத்தலைவர் ‘மாவீரன் பிரபாகரன்’ வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.ஸ்டுடியோ 18 பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை, லைட்மேன்,நீலம்,உனக்குள் நான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ‘வெங்கடேஷ் குமார் ஜி.’இயக்குகிறார்.இப்படத்திற்கு ‘சீறும் புலிகள்’ என பெயரிடப்பட்டுள்ளது.இது குறித்து இப் படநிறுவனம் கூறியதாவது, ‘மேதகு தமிழ்த் தேசியத்தலைவர் மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.இத் தருணத்தில் இப்படத்தின் தலைப்பை நாங்கள் வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்’ என தெரிவித்துள்ளது.இப்படத்தின் நடிகர் நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.