கவர்ச்சி இல்லாமல் சிலை வடிக்க முடியுமா? கல்லிலும் கலை நயம் கண்டவன் மனிதன்.
பெண்ணின் மார்பகம் செதுக்கும்போது கூட அவனுக்கு சிற்பக்கலை கட்டளை இடும்
.”இடது வலது சிறுத்து,பருத்து செதுக்கு. இயல்பினை மறக்காதே!”
உடலுக்கேற்ற உடைகள் இடையில் வந்ததுதானே ,அதனால் எனது உண்மையான உடம்பை உலகுக்குக் காட்டுவதில் என்ன தவறு என நிர்வாணமாகவும் நடித்தவர்தான் சன்னி லியோன்.
அவரை தற்போது வீரமாதேவியாக தமிழுக்கு கொண்டு வரப்போகிறார்கள்.
ஆனால் வட நாட்டவர் இவரது வாழ்க்கை வரலாற்றை திரைக்கு கொண்டு வரப்போகிறார்கள். இவர் இயற்பெயர் கரேன் ஜித். பஞ்சாபி பெண்.அந்த படத்தை இவருக்கு முன்னதாகவே திரையிட்டுக் காட்டி விட்டார்கள்.
பார்த்தவர் பகிர்ந்த வார்த்தைகள்தான் இவை.!
“அன்று இரவு உறக்கம் கொள்ளவில்லை. எனது இதயம் ஆயிரம் தடவையாவது உடைந்து கதறி இருக்கும். அழுதேன். எவ்வளவு துன்பம்,துயரம், எனது இளம்பருவத்தில்!” என சொல்லி இருக்கிறார் சன்னி.
நமக்கு சோனா நினைவு வருகிறது.