அற்புதமான படைப்பாளி முக்தா சீனிவாசன். இவரது அண்ணன் ராமசாமி. இவரை சிக்கனமான முதலாளி என்பார்கள். திட்டமிடுதலில் அண்ணன் திறமைசாலி.அண்ணனின் வழிகாட்டுதல்படிதான் தம்பி சீனிவாசன் நடந்து கொள்வார்.
முக்தா சீனிவாசன் ( 88 ) இன்று நம்மிடையே இல்லை.செவ்வாய்க்கிழமை பின்னிரவில் இயற்கை எய்தினார்,
இவரது தாமரைக்குளம் தான் நாகேஷை அறிமுகம் செய்தது. இயக்குனர்கள் கே.ராம்நாத், வீணை பாலசந்தர் ஆகியோரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய இவர் பின்னாட்களில் சிவாஜி கணேசனின் நட்புக்கு உரியவர் ஆனார். ஜி.கே.மூப்பனாரின் பள்ளித் தோழர்.
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு தனியாக ஒரு சங்கம் வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் விருப்பம். அதை முக்தா சீனிவாசன் வழியாக நிறைவேற்றிக்கொண்டார்.
ஆனால் தமிழ் நடிகர்கள் சங்கம் அமைய வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் இன்னொரு ஆசை.அது அடுத்த நூற்றாண்டிலாவது நிறைவேறுமா என்பது சந்தேகம்தான்!
இவரது சூரியகாந்தி படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு தலைமை தாங்கியவர் தந்தை பெரியார்,
இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றிப்படங்களாகவே இருந்தன,
அவரது மரணத்துக்கு ‘சினிமா முரசம்’ இரங்கல் தெரிவிக்கிறது.