தமிழ் சினிமாவில் பல பிரமாண்ட படங்களை தயாரித்தவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இவர் தயாரிப்பில் வெளியான ஐ திரைப்படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. மேலும்,இதை தொடர்ந்து, இவர் தயாரிப்பில் விஸ்வரூபம்-2, பூலோகம் என பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.. இந்நிலையில் இவர் இந்த படங்களுக்காக வாங்கிய கடன் ரூ 97 கோடி வரைபாக்கி உள்ளது எனக்கூற ப்படுகிறது.. இதனால் பிரபல வங்கி அதிரடியாக இவருடைய அலுவலகம், வீடு, திரையரங்குகள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது என்கிறது கோடம்பாக்க வட்டாரம். இதை அறிந்த பல திரை உலக நட்சத்திரங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனராம்.