காதலிப்பது ஒருவரை, கைப்பிடிப்பது வேறு ஒருவரை என்பது ‘இதெல்லாம் சகஜமப்பா!’ என்கிற ரேஞ்சுக்கு இருக்கிறது.ஆனால் வி.ஐ.பி, அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் என இந்த வகை ஆட்களின் காதல் மாற்றங்கள்தான் பளிச்சென கண்களில் பட்டு விடுகிறது.
டெல்லி பொண்ணு டாப்சியும் டென்மார்க் பாட்மின்டன் பிளேயர் மத்யாஸ் இருவரும் தீவிரமான காதலர்கள்.கல்யாணம் வரை போகலாம் என எதிர்பார்க்கப் படுகிற ஜோடி.
திடீரென பாலிவுட் நடிகர் ஹர்சவர்தனுடன் பைக்கில் ஒன்றாக சுற்றத் தொடங்கி விட்டார் டாப்சி!
காதலுக்கு என்னாச்சு?
“மறைஞ்சிருந்து போட்டோ எடுக்கிற பாப்பராசிகளால்தான் இந்த மாதிரியான கேள்விகள் வருது. ஹர்சவர்தனுடன் சுற்றியது காதலால் இல்ல .அது ஒரு படத்தின் புரமொஷனுக்காக” என்கிறார் டாப்சி.