‘சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீர்கள்,தமிழக முதல்வர் என்று சொல்லப் பழகுங்கள்” என்கிறார் கொ.ப.செ.தமிழருவி மணியன். என்னே ஒரு சாணக்கியத்தனம்!
தூத்துக்குடியில் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கிறது.
ஆறுதல் சொல்ல வந்தவரைப் பார்த்து “நீங்க யாரு?” என்று காயம் பட்டவர் கேட்க “நான் ரஜினி!” என்று சொல்ல வேண்டிய கஷ்டமான சூழல்.இதுவரை அப்படியொரு அவஸ்தையை பட்டிருக்க மாட்டார்.
ஸ்டெர்லைட் நச்சுப்புகை ஊருக்குச்சென்று திரும்பிய ரஜினிக்கு சென்னை விமான நிலையத்தில் தான் சித்து ஜில்லாடி வேலையை காட்டியிருக்கிறார்கள் செய்தியாளர்கள். விஜயகாந்த் ரேஞ்சுக்கு அன்று ரஜினிக்கு கோபம் வந்து விட்டது. இனி அடிதான் பாக்கி.!
“தூத்துக்குடி சம்பவத்துக்கு சமூகவிரோதிகள்தான் காரணம் என்று உச்சந்தலையில் அடித்து சொல்கிறார். சமூகவிரோதிகள்தானே அன்று சுட்டுத்தள்ளினார்கள். சீருடை இல்லாமல் ஆயுதங்களுடன் ஊடுருவி இருந்தவர்களை அப்படித்தான் சொல்ல முடியும்!
சரி இப்போது சித்தார்த், பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் சொல்லியிருப்பதை பார்க்கலாம்.
“அடுத்து இவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? தூத்துக்குடியை மாசு படுத்தியது ஸ்டெர்லைட் ஆலை இல்லை.சமூக விரோதிகள்தான்!” என்று சொல்கிறார் நடிகர் சித்தார்த்.
“யாரும் மக்கள் பிரச்னைக்காக போராடாதீர்கள்.எண்பது ரூபா டிக்கெட்டை இரண்டாயிரம் ரூபாய்க்கு எடுக்கப் போராடுங்கப்பா!” என்பதாக சி.வி.குமார் சொல்லி இருக்கிறார்.
எல்லாம் காலா படம் ரிலீஸ் ஆகும்வரைதான்!
ஆரம்ப சூரப்புலி(ளி)த்தனம்!