“அட போங்க சார். கவர்மெண்டுக்கு தெரியாம நடக்கிறதுக்கு சான்சே இல்லை. இது பிஜேபிக்கு வேண்டிய ஆளு நடத்துற வெப்சைட்டாக இருக்கும்” என்றார் எடுத்த எடுப்பிலேயே!
“ஒரு பெண் வீட்டாரிடம் எவ்வளவு வரதட்சனை வாங்கலாம் என்பதை கணக்குப் போட்டுச்சொல்வதற்கு ஒரு வெப்சைட் இருக்கு,காலம் காலமா நடக்கிதே,இதை எப்படி அனுமதிக்கிறாங்க” என்கிற கேள்விக்குத்தான் முதல் பாராவில் பதில் இருக்கிறது.
வரதட்சணை வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என்று சட்டமே இருக்கிறபோது வெப்சைட் வழியாக ஒருத்தன் இவ்வளவு வாங்கலாம் என்று கணக்குப் போட்டு சொல்கிறான் என்றால் இதற்கு அரசும் உடந்தைதானே?
எப்படியோ மத்திய அமைச்சரவையில் இருக்கிற மேனகா காந்திக்கு தெரிந்திருக்கிறது..அவராலும் என்ன செய்ய முடிந்தது?
தொடர்புடைய மந்திரிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். “அந்த வெப்சைட்டை உடனடியாக தடை செய்யுங்கள் வெட்கமாக இருக்கிறது ” என்று.
அவர் கடிதம் எழுதி இரண்டு நாளாகி விட்டது இன்னமும் வெப்சைட் நடந்து கொண்டுதான் இருக்கிறது,