தமிழில் அட்டக்கத்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நந்திதா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனைவரும் அவரை ‘அட்டக்கத்தி’ நந்திதா என்றே அழைக்கத் தொடங்கினார்கள். இப்படத்தைத் தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.தற்போது உப்புக்கருவாடு, இடம் பொருள் ஏவல் மற்றும் புலி ஆகிய படங்களில் பிசியாக நந்திதா நடித்து வருகிறார். இந்நிலையில்,நந்திதா தன வலை தளத்தில்,தற்போது புலிப்பட ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.மேலும், சமூகவலைதளங்களில் ஏற்படும் பெயர்க் குழப்பங்களைத் தவிர்க்க இனி, தனது பெயரை நந்திதா ஸ்வேதா என அழைக்கும் படி கூறியுள்ளார்.