வன்புணர்வு ,பச்சைக் குழந்தைகளும் பாலியல் கோரத்துக்குத் தப்புவதில்லை பெற்றவனே பிழை என்கிற இழி நிலைகள் சமுதாயத்தில் உச்சம் பெறுகிறபோதுதான்—-
“எனக்கும் அந்த அனுபவம் இருக்கிறது ” என்கிற ஒரு குரல் திரை உலகிலிருந்து வருகிறது.பின்னர் அது பரவலாகிறது.
‘காஸ்டிங் கவுச்’ எந்தத் துறையில்தான் இல்லை’ என்கிற நியாயப்படுத்துகிற முயற்சியும் நடக்கிறது. அரசியலில் இருந்து எந்த பெண்ணும் தனது அனுபவத்தை சொன்னதில்லை.ஆன்மீகத்தில் எந்த பெண்ணும் ‘ஆம் நான் அப்படிப்பட்டவள்தான் ‘ என அறிவித்துக் கொள்ளவில்லை. நித்தியானந்தா கூட இன்னமும் கடவுளாகத்தான் மதிக்கப்படுகிறார். சமூகம் அவரை முன்னிலும் அதிகமாகவே வணங்குகிறது.இதெல்லாம் எதனால்?
ஆக செக்ஸ் பரிமாற்றம்’ என்பது ஒரு நோய் என்கிற வகையில் மட்டுமே ‘காஸ்டிங் கவுச்’அணுகப்படுகிறது பார்க்கப்படுகிறது என்பதுதான் பொதுக்கருத்தாக கொள்ள முடியும்.!
ஒரு காலத்தில் கதையின் நாயகியாக பிரபலமாக இருந்தவர் கஸ்தூரி. இன்று சமூகம் சார்ந்து அவரது கருத்துகளை துணிந்து சொல்லி வருகிறார். அவலங்களை சாடி வருகிறார். துணிச்சல் தெரிகிறது. அவருக்கு சட்டமும் தெரியும்.!
அண்மையில்….
“எனது படங்களின் டைரக்டர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றிக் கடனாக. ‘குரு தட்சணை’யை எப்படி வேண்டுமானாலும் கொடுக்க முடியும் என்பது தயாரிப்பாளரின் கருத்து. நான் கடுமையாக கண்டித்த பின்னர் அந்த டைரக்டர் என்னுடன் பேசுவதில்லை.
படுகிழமான ஒரு தயாரிப்பாளர் எனக்காக ஓட்டலில் ரூம் போடுவதாகச்சொல்லி அழைத்தார். இம்மாதிரியான டைரக்டர்கள்,தயாரிப்பாளர்கள்தான் தமிழ்ச் சினிமாவின் சாபங்கள். சபிக்கப்பட்டவர்கள்” என்கிறார் கஸ்தூரி.
நமக்குள்ள சந்தேகம் எல்லாம் கஸ்தூரி இந்த குற்றச்சாட்டுகளை அப்போதிருந்த நடிகர் சங்கத்தில் ஏன் புகாராகப் பதிவு செய்யவில்லை என்பதுதான்.!
நடிகர் சங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாததுதான் காரணமா?