தளபதி விஜய் ரசிகர்களின் வெகுநாள் காத்திருப்பான ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது இயக்குநர் ஏஆர் .முருகதாஸ் கிளாப் அடித்து தொடங்கி வைத்திருக்கிறார்,
வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டு புளகாங்கிதம் அடைந்து பொங்கி பூரித்திருக்கிறார்.
“என்னால் இந்த நாளை மறக்க முடியாது. அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன்.கதையைப்பற்றி யாரிடமும் மூச்சு விடக்கூடாது என்று டைரக்டர் உத்திரவு போட்டிருக்கிறார். நல்ல கேரக்டர் அவ்வளவுதான் சொல்வேன் ” என்கிறார் வரலட்சுமி.
ராதாரவி, பழ.கருப்பையா ஆகிய இருவரும் மோசமான அரசியல்வாதிகளாக படத்தில் நடிக்கிறார்கள் இருவருக்கும் அரசியலில் மலையை முழுங்கி ,மண்ணை ஜீரணிக்கும் கடுமையான வேஷமாம். அப்படியென்றால் நடப்பு அரசியலுக்கு செமையான சவுக்கடி இருக்கிறது என நம்பலாம்.
தளபதி விஜய் ,கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிற படம்
‘காலா ‘அரசியலையும் இப்படம் தாண்டும் என்கிறார்கள். இந்த படத்தில் விஜய்யை ஒரு பாடலையாவது பாட வைத்து விடவேண்டும் என்று ஏஆர் ரகுமானும் முருகதாசும் முடிவு செய்திருக்கிறார்கள்.பலன் கிட்டினால் லட்சக்கணக்கான ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளலாம். அச்சமில்லை அச்சமில்லை ரேஞ்சுக்கு பாடல் வரிகள் அமைந்து விட்டால் தமிழ்நாடே எழுச்சி பெற்ற மாதிரிதான்!
செய்வார்களா?