மலையோர கிராமத்தில் பூத்த அதிசய மலர் இளையராஜா!
வாடாத மலர்.இந்தியத் துணைக்கண்டமே வியந்து பாராட்டும் இசை ஞானி ,
இன்று அந்த இளைஞனுக்கு வயது 75.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அகம் மலர்ந்து வாழ்த்துச்செய்தி அனுப்பி இருக்கிறார்,
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்வுகளால் நொந்து போயிருக்கிற ஞானி தனது பிறந்த நாளினை கொண்டாடுகிற மன நிலையில் இல்லை.இதனால் தொலைபேசி வழி வாழ்த்துகள் மட்டுமே.
ஆனாலும் காலையில் இருந்தே அவரது ரசிகர்கள் பிரசாத் படப்பிடிப்பு நிலையத்தில் கூட ஆரம்பித்து விட்டார்கள். அவரை சந்தித்தே ஆகவேண்டும் என்கிற தீர்மானத்துடன் இருந்தவர்களை இளையராஜா சந்தித்து நன்றியை தெரிவித்துக்கொண்டார்,புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்,
இசைக்கு வயதில்லை. வாழிய பல்லாண்டு என சினிமா முரசம் வாழ்த்துகிறது.