ரஜினிகாந்த் நடிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா திரைப்படம் வரும் 7- ந்தேதி முதல், உலகம் முழுவதிலும் வெளியாகவுள்ளது .இப்படம் அமெரிக்காவிலும் அதிக திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.இந்நிலையில்,அமெரிக்க திரையரங்குகளில் உள்ள முக்கிய திரையரங்குகளில் ஒன்றான சினிமார்க், தனது டுவிட்டர் பக்கத்தில், காலா படத்தின் கதைச் சுருக்கத்தை வெளியிட்டு விளம்பரம் செய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சிறு வயதில் மும்பைக்கு செல்லும் காலா,அங்குள்ள குடிசைப்பகுதியான தாராவியில் வளர்ந்து ‘டானாக’ ,கேங்க்ஸ்டராக மாறி,பின்னர் அப்பகுதி மக்களுக்காக போராடும் காலா திரைப்படத்தை பார்க்க வாங்க என்று குறிப்பிட்டுள்ளது.