தமிழ்த் திரை உலகில் சிலர் தங்களது கருத்துகளைப் பதிப்பது போல இயக்குநர் ,முத்தையாவும் அவர் வழியில் கருத்துகளை பதிய வைத்துக் கொண்டிருக்கிறார்.குட்டிப்புலி,கொம்பன் படங்கள் ஆகிய படங்கள் தென்மாவட்டத்து மக்களில் ஒரு பிரிவினரின் வழக்க ,பழக்கங்கள்தான்.
தேவராட்டம் என்பது விளாத்திகுளம் ,எட்டயபுரம் ,பாஞ்சாலங்குறிச்சி, இன்னும் சில நெல்லைப் பகுதியில் ஆடப்படுகிற ஒரு வகையான ஆட்டம்.தேவலோகத்தில் தேவர்கள் மகிழ்ந்து ஆடிய ஆட்டம் என்பதால் இந்தப் பெயர் வந்தது என சொல்வார்கள். ராஜ கம்பளத்து நாயக்கர்களின் திருவிழா, மணவிழா,மற்றும் மங்கள விழாக்களில் இன்றும் ஆடிவருகிறார்கள். உருமி மேளம்தான் முக்கிய வாத்தியம். தாரை தப்பட்டை ஆகியவை பக்க வாத்தியங்கள்.
அவர்களின் ஆட்டத்தின் பெயரில் முத்தையா இயக்கவிருக்கும் படத்தில் கவுதம்கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு இணையாக மஞ்சிமா மோகன்
மேலும் பல நடிகர்கள் தேர்வு மதுரையில் நடந்தது. மண் சார்ந்த கதை என்பதால் அந்தப் பகுதிகளைச் சார்ந்தவர்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார்.
“உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து டைரக்டர் கதை பண்ணி இருக்கிறார் .அதற்கான முகங்களைத் தேடித்தான் மதுரையில் முகாம் போட்டிருக்கிறோம். ஹீரோயின் தேர்வு கூட நேற்றுத்தான் முடிந்தது. உணர்ச்சிகரமான கதை.அவ்வளவுதான் சொல்ல முடியும்” என்கிறார் யூனிட்டை சேர்ந்தவர்.
ஞானவேல்ராஜா தயாரிக்கிற படம்.