இன்னும் நாளே நாட்கள்தான் ‘காலா’வின் பிரவேசத்துக்கு!
கல்லாப்பெட்டிக்குள் கை வைக்கும்போது கருந்தேள் கொட்டினால் எப்படி இருக்கும்?
அப்படி ஆகிப்போனது காலாவின் கதையும்.!
காலா ரஜினியை சென்னை விமானநிலையத்தில் வெறுப்பேற்றியது பத்திரிகையாளர்கள் என்றால் கோர்ட்டுக்குப் போய் இருப்பதும் ஒரு பத்திரிகையாளர் தான்!
பெயர் ஜவகர். இருப்பது மும்பை,
“என்னுடைய அப்பாதான் திரவிய நாடார், தூத்துக்குடிதான் சொந்த ஊர்.( அட ,,ரஜினியை ‘நீங்க யாரு’ன்னு கேட்டதும் அந்த ஊர்தான்.) 1957-ல் தாராவிக்கு வந்தார். அப்ப கடுமையான பஞ்சம். குடிக்க தண்ணீர் இல்ல.அங்க வாழ்ந்த தமிழர்களுக்காகவும் மற்ற மக்களுக்காகவும் கடுமையாக போராடினார். அவங்களுக்கு காட் பாதராக இருந்தார். செல்லமாக ‘சேத்’ என்றுதான் சொல்வார்கள். வெல்லம், கருப்பட்டி வியாபாரம். அதெல்லாம் இந்த கதையில் இருக்கு. எங்கப்பாவின் வாழ்க்கைதான் கதாசிரியர் ரஞ்சித்துக்கும் படத் தயாரிப்பாளர்க்கும் ஆதாரமாக இருந்திருக்கிறது. என்னை கேட்காமல்,எங்கள் அனுமதி இல்லாமல் எங்கள் அப்பாவின் கதையை படமாக்கி இருப்பதால் எனக்கு நூறு கோடி தரவேண்டும்.என்னுடைய பெயரையும் டைட்டிலில் போடவேண்டும் “என்று அவதூறு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்,
லட்டு எடுப்பதற்கு கையை வைத்தால் வெட்டுவேன்னு மிரட்டுற கதையாக இருக்கே!