ஆரவாரமில்லாமல் வெளியாகி கருவூலத்தை நிரப்புகிற படங்கள் வெகுசில.
அதில் பல சூர்யாவினுடையது.!
ஆழ்கடலின் மடியில் அடுக்கடுக்காக படுத்துக்கிடக்கும் பாறைகள் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொள்ளும்போது பிறப்பது ஆழிப் பேரலை. சிற்றின்ப உணர்வுகளால் ஆணும் பெண்ணும் முட்டிக் கொள்ளும் போது பிறப்பது பேரின்பநிலை..இவ்விரண்டின் கலவைதான் சூர்யாவின் திரைக்கலை.
அவர் அமைதியாக இருக்கிறார் என்றால் மிகப்பெரிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன என பொருள் கொள்க.
சூர்யா 37 இயக்குநர் கே.வி.ஆனந்துடன் இணைந்திருக்கிறபடம் .அவர்கள் இருவருக்கும் அது மூன்றாவது படைப்பு. ஜூன் 23-ல் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிறது. லைகாவின் பெரிய பட்ஜெட். பிரமாண்டம்.
இயக்குநர் செல்வராகவனின் பட வேலைகள் இன்னும் 25 நாட்களில் முடிந்து விடும் .50 நாட்கள் எப்படி கடந்தன என்பது தெரியாமல் உழைத்திருக்கிறார்கள்.
சூர்யாவின் சொந்த நிறுவனமான 2 டி. எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சூர்யா 38 படத்தின் இயக்குநர் சுதா. அழுத்தமான சமுதாயப் பார்வை இருக்கும் என நம்பலாம்.
இதற்கு அடுத்ததுதான் இயக்குநர் ஹரியின் மிரட்டல் படம். சிங்கம் வரிசைகளையும் விஞ்சும் என்கிறார்கள்..
இவ்வளவு பிசியாக இருப்பவரால் அமைதியாகத்தான் இருக்க முடியும்! அவரென்ன அரசியல்வாதியா ஆர்ப்பரிக்க!