பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஐ படத்தின் தயாரிப்புக்காக சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சொத்துக்களை அடமானம் வைத்து கடன் வாங்கி இருந்தார். ரூ.84 கோடிவரை கடன் வாங்கி இருந்ததார். அந்த தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.97 கோடியாக உயர்ந்து விட்டநிலையில் அதை திருப்பி குறிப்பிட்ட கால கெடுவுக்குள் செலுத்தாமல்’ஐ ‘படத்தையும் வெளியிட்டுவிட்டாராம் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இதனால் சொத்துக்களை முடக்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு ள்ளது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சென்னையில் உள்ள கட்டிடங்கள் வீடுகள், வேலூரில் உள்ள தியேட்டர்கள் உள்பட 40 ஆயிரத்துக்கு 121 சதுர அடி சொத்துக்களை வங்கி முடக்கியுள்ளது. இது குறித்து ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தரப்பில் கூறும்போது, திரையுல வியாபாரத்தில் சகஜமான ஓன்று தான் . “பணத்தை திருப்பிச் செலுத்த கால அவகாசம் கேட்டு வங்கிக்கு கடிதம் எழுதப்பட்டு, அதிகாரிகளுடனும் பேச்சு வார்த்தை நடக்கிறது. விரைவில் கடன் தொகை திருப்பி செலுத்தப்படும். திட்டமிட்டபடி அடுத்தடுத்து எனது தயாரிப்பு படங்கள் வெளியாகும் என்றனர்.