காலா படத்துக்கு தமிழ்நாட்டில் இதுவரை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடக்கவில்லை,நடப்பதற்கான அறிகுறியும் இல்லை. நடந்தால் சென்னை விமான நிலைய பிரஸ்மீட் மாதிரி ஆகிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம்.
படம் ஆந்திராவில் வியாபாரம் ஆகவேண்டுமே. அதற்காக கடும் மழைக்கு மத்தியிலும் ஹைதராபாத்தில் பிரஸ் மீட் நடந்திருக்கிறது. அனைவருமே கலந்து கொண்டிருக்கிறார்கள். விநியோக அடிப்படையில்தான் அங்கும் காலா கொடுக்கப்பட்டிருக்கிறது.பெரும் தொகை கொடுத்து யாரும் வாங்குவதற்கு தயாராக இல்லை. நைஜாம் ஏரியாவை தில் ராஜூ என்பவர் வாங்க இதர ஏரியாவை பிரசாத் என்பவர் வாங்கி இருக்கிறாராம்.
தமிழ்நாட்டில் பேசுவதைப்போல மாமனார் ரஜினியை ஒரே சூரியன்தான் என்கிற ரேஞ்சில் வைத்துப் பேசிஇருக்கிறார் தனுஷ். அங்குள்ள சூப்பர்களை கடுப்பாக்கி விடாதா ,அவர்களுடைய ரசிகர்களை தூண்டிவிட்டு விட்டால் கலெக்சனில் வெட்டு விழுந்து விடுமே!
.“எத்தனையோ இளம் நடிகர்கள் ரஜினி மாதிரி ஆகவேண்டும் என்று பார்க்கிறார்கள்.ஆனால் .ஒரே ஒரு ரஜினிதான் இருக்க முடியும் ” என்று பேசி இருக்கிறார்.
இது எத்தகைய வம்புக்கு கொம்பு சீவி விடும் என்பது அனுபவஸ்தர் ரஜினிக்கு புரியாமல் போய் விடுமா? தனுஷ் இளம் ரத்தம். அதுவும் காலா பட தயாரிப்பாளர், ரஜினி சொந்த மாமனார் .அவரை உச்சத்தில் வைக்காவிட்டால் எப்படி?
நாற்பதாண்டு கால அனுபவம் ரஜினியின் பேச்சில்.!
“ஒரே ஒரு ரஜினிதான் இருக்க முடியும் என்று தனுஷ் பேசினார். யாருமே பெரிய ஆள் இல்லை.ஒவ்வொருவருக்கும் தனித்துவம் இருக்கிறது.நான் சொல்வேன் ஒரே ஒரு சிரஞ்சீவி, பால கிருஷ்ணா,நாகார்ஜுனா,வெங்கடேஷ் தான் இருக்க முடியும்.நமது வெற்றி கடின உழைப்பில்தான் இருக்கிறது” என்று பேசி வெட்டி பஞ்சாயத்துக்கு வழி இல்லாமல் செய்து விட்டார்.
இதாங்க பெரிய மனுசத்தனம் என்பது!