பள்ளத்தில் விழுந்தாலும் ஜீப் கிளம்பிவிடும் என்கிற நம்பிக்கை சில முரட்டுத் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு அட்சய பாத்திரமாக இருக்கிறார் ரஜினி காந்த், அரசியலுக்கு வருவதால் முன்னை விட அதிகமாகவே அள்ளிவிடலாம் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. கையில் வைத்திருக்கிற மீடியாவின் பலத்தை வைத்துக் கொண்டு செய்து முடிக்க முடியாதா என்ன?
இத்தகைய நம்பிக்கை தயாரிப்பாளருக்கு!
அரசியலுக்குப் பயன்படுமே என்பது ரஜினிக்கு!
இந்த வாரக்கடைசியில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் நடிப்பதற்கு டேராடூன் கிளம்ப வேண்டும். முதியவர் வேஷத்துக்கு (!) முற்றுப் புள்ளி வைத்து விட்டு கருப்புச்சாயம் பூசி வாலிபராக தயாராகி இருக்கிறார் சூப்பர் ஸ்டார். மேகா ஆகாஷ் ,விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா,சிம்ரன் ஆகியோருடன் புதிதாக இணைந்திருக்கிறார் யோகிபாபு!
இது யோகிபாபு சீசன்!