சபாவில் நடனமாடுகிற பரத நாட்டிய பேரொளியாக இருந்தாலும் சந்து முனைக்கு ஆட வந்து விட்டால் டப்பாங்குத்து பேரழகிதான்! அவனவன் ஜாக்கெட்டுகளில் பின் குத்தாமல் விட மாட்டான்.
அப்படி ஆகிவிட்டது ரஜினியின் நிலைமை! ஆளாளுக்கு கத்தி போடுகிறார்கள்.
எந்த புண்ணியவான் ஜாதகம் பார்த்து கணித்து ஆன்மீக அரசியல் என்று சொல்ல வைத்தானோ அவனின் உடம்பில் வெல்லப்பாகை ஊற்றி வெயிலில் உருட்டி விட வேண்டும்.
ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஆரத்தி எடுக்கிற ஒரே ஆள் தமிழருவிமணியன் தான். ராசியான ஆள்.!
“எந்த சுயநலமும் இல்லாமல் மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ,எதைப்பற்றியும் யோசிக்காமல் சிறைக்குச் செல்வதற்கும் அஞ்சாமல் களத்துக்கு வருவதுதான் அரசியல். கணக்குப்போட்டு வருவதற்குப் பெயர் வியாபாரம். அந்த வியாபாரத்துக்கு அரசியல் என்று பெயர் வைக்கக்கூடாது. அதற்கு சிலர் ஆன்மிக அரசியல் என பெயர் வைத்திருக்கிறார்கள். வெற்றிடம் உண்டாகும்போது வருவது அரசியல் இல்லை” என்று கும்மி எடுத்து இருக்கிறார் சத்யராஜ்.
கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசும்போதுதான் இப்படி காய்ச்சி இருக்கிறார்,