நடிகர்கள்: கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், விவேக், டாப்சி, சதீஷ், தனுஷ்,எஸ்,ஜே.சூர்யா.இசை: யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு: வேல்ராஜ் . இயக்கம்: ஐஸ்வர்யா ஆர். தனுஷ். Rating; 3/5.
‘3 ‘படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், வெளிவந்திருக்கும் இரண்டாவது திரைப்படம்,’ வை ராஜா வை’. கவு தம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், இவர்களுடன், தனுஷ் ,எஸ்.ஜே.சூர்யா சிறப்பு தோற்றம் வேறு! இதனால் ஒருவித எதிர்பார்ப்பு இயல்பாகவே நம் மிடையே தொற்றிக்கொள்கிறது. நடுத்தர குடும்பத்து பையனான கவுதமுக்கு இயற்கையாகவே எதையும் முன் கணித்துச் சொல்லும் ஒரு ‘அபார ‘ சக்தி இருக்கிறது. இதன் காரணமாக, சிறுவயதில் அவன் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடுகிறது. பள்ளித் தேர்வில் என்ன கேள்விகள் கேட்கப் போகிறார்கள் என்பதை முன் கூடியே சொல்லும் அளவிற்கு.இதன் காரணமாக பள்ளிக்கூட படிப்பிற்கும் இடைஞ்சல் வர, அப்படி ஒரு’ சக்தி ‘இருப்பதைே மறந்து விடுமாறு தந்தை வசந்த் அறிவுறுத்த , மெல்ல மெல்ல அந்த சக்தியை மறந்து விடுகிறான் .இதன் பிறகு சராசரிவாழ்க்கைக்கு திரும்பி விடுகிறான். காலமும் உருண்டு ஓடுகிறது.தன் நண்பன் உதவியுடன் ஒரு செல்போன் நிறுவனத்தில் கவுதமுக்கு வேலை கிடைக்கிறது. இந்நிலையில் தன் சைக்கிள் மீது மோதும் பிரியா ஆனந்தை, முதல் சந்திப்பிலேயே காதலிக்கிறார். இரு வீட்டிலும்அவர்களின் காதலுக்கு கிரீன் சிக்னல் . வேலை, நண்பன், காதலி என்று நிம்மதி யான வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் சூழலில் ,மீண்டும் அந்த சக்தி கவுதமுக்குள் நுழைந்து விடுகிறது. அலுவலகத்தில் ( பாண்டா) விவேக்கின் அறிமுகம் கிடைக்கிறது. விவேக் ஒரு முழுநேர சூதாடி. ஒரு சூதாட்டத்தில் 10 லட்ச ரூபாய் தோற்றுவிட்டதால் வில்லன் (ராந்தை) டேனியல் பாலாஜி விவேக்கை மிரட்டுகிறார். கவுதமின் அபார சக்தியை தெரிந்து கொள்ளும் விவேக், தன்னுடைய இக்கட்டான பிரச்சனையை தீர்க்க கவுதமை பயன்படுத்துகிறார். கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒவ்வொரு பந்திலும் அடுத்து என்ன நடக்கும் என்பதை மிகச்சரியாக கணித்து ரூ.1 கோடியை சில மணி நேரத்தில் சம்பாதிக்கிறார் கவுதம்.இதனால் விவேக்கின் பணப்பிரச்சனை தீர் கிறது. ஆனால் கவு தமிற்கு பிரச்சனை ஆரம்பமாகிறது. ஒரு கோடியை இழந்த வில்லன் (ராந்தை)டேனியல் பாலாஜி, கடும் ஆத்திரமடைகிறார். ஜெயித்த பணத்தில் ஜாலியாக கோவா செல்லும் கவுதம் மற்றும் விவேக்கை விரட்டிப் பிடித்து, கவுதமின் காதலி ப்ரியா ஆனந்தை துப்பாக்கி முனையில் மிரட்டி, மீண்டும் தனக்காக ,கவுதமை ஒரு சொகுசு கப்பலில் நடக்கும் காசினோவில் சூதாட வைக்கிறார் டேனியல். ஆனால்,அங்கு சூதாடி பணத்தை ஜெயித்தாலும் ஆபத்து, தோற்றாலும் ஆபத்து… அதிலிருந்து ஒரு கட்டத்தில் அந்த விளையாட்டு கும்பலிடம் டேனியலை மாட்டிவிட்டு கவு தம் அன் கோ தப்பி சென்னை திரும்புகிறது..ஆனால், எதிர்பாராத வகையில் அங்கிருந்து தப்பித்து சென்னை திருப்புகிறான் (ராந்தை )டேனியல் பாலாஜி (ராந்தை)யின் பிடியிலிருந்து – கவுதம் கார்த்திக் தப்பித்தாரா! இல்லையா! என்பது தான் சுவாரசியமான மீதிக் கதை. கடல், என்னமோ ஏதோ படங்களை விட , வை ராஜா வை கவு தம் கார்த்திக்கிற்கு மிகவும் கை கொடுதிருக்கிறது என்று சொல்ல வேண்டும்.அவரின் துறுதுறு பார்வையும், விறுவிறு நடிப்பும், காமெடி காட்சிகளும் மிக நன்றாக இருக்கிறது. ‘கொக்கி குமாராக’ கெஸ்ட் ரோலில் வந்து போகும் தனுஷ் ஐந்து நிமிடங்களே வந்தாலும் தியேட்டரே அதிர்கிறது. ப்ரியா ஆனந்த் – டாப்சி என இரண்டு கதாநாயகிகள். இருவரில் டாப்சிக்கு வாய்ப்புகள் குறைவு என்றாலும் தாசி தான்’ டாப்’ ரகமாக தெரிகிறார். ப்ரியா ஆனந்த்தை இன்னும் இயக்குனர் பயன்படுத்தியிருக்கலாம். இயக்குநர் வஸந்த், கௌதம் கார்த்தியின் அப்பாவாக கச்சிதம்! டேனியல் பாலாஜி, சதீஷ் தங்கள் கேரக்டரை சிறப்பாக செய்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள், பின்னணி இசைஆகியவை கதைக்கேற்றபடி மிரட்டலாக இருப்பது பிரமாதம். எஸ்.ஜே.சூர்யா ஆடிவிட்டு போகும் ‘வை ராஜா வை’ பாடல் ரசிகர்களை பெரிதாக கவரும் என்பது உறுதி!வேல்ராஜின் ஔிப்பதிவு மிளிர்கிறது. கப்பல் காட்சிகளில் அவரது கேமரா, சூதாட்டத்துடன் சேர்ந்து விளையாடி இருக்கிறது. முதல்படத்தில் காதலுடன் கொஞ்சம் சைக்கோ தனத்தையும் கலந்து சொன்ன இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ். ஒரு பக்கா கமர்சியல் கதையை தந்திருக்கிறார்.விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் கதையை மிகக் கச்சிதமாக உச்ச கட்ட காட்சியில், கொக்கி குமார் தனுஷை வைத்து படத்தை முடித்துள்ள புத்திசாலித்தனம். வாவ்..! கண்டிப்பாக ஐஸ்வர்யாவை பாராட்டியே ஆகவேண்டும். இது போன்ற கதைகளை கையாண்டால் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகி விடுவார் ஐஸ்வர்யாதனுஷ்! மொத்தத்தில்’ வை ராஜா வை ‘ஒரு நல்ல பொழுது போக்கு படம் என்பதால் பார்க்கலாம்.