
பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் பாலம் தான் சினிமா. அப்படி இயங்கிவரும் சினிமா துறையின் மீது அரசியல் சாயம் பூசுவது நியாயமற்றது. ஒரு திரைப்படம் வெளியாவதில் அரசியல்புகக்கூடாது.இந்த தீர்ப்பு அனைத்து திரைத்துறையினரும் வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. இதன் மூலம் இரு மாநில மக்களுமே மகிழ்ச்சி அடைவார்கள்.
கர்நாடகவில் முதல்வராக பதவியேற்றுள்ள மாண்புமிகு முதல்வர் திரு.குமாரசாமி அவர்களுக்கு வணக்கத்துடன், வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். காலா திரைப்படத்திற்கு தொடர்ந்துவரும் பிரச்னைகளுக்கு ஒரு முற்றுபுள்ளி வைப்பீர்கள் என்று எங்களுக்கு அபார நம்பிக்கை உள்ளது. கர்நாடக அரசு காலா திரைப்படம் வெளியாவதை உறுதி செய்வதோடு படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கும் காண வரும் ரசிகர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் என்று நம்புகிறோம். இதனை ஒரு கோரிக்கையாகவே கர்நாடக அரசிடம் வைக்கிறோம். மாண்புமிகு முதலமைச்சர் தாங்கள் எடுக்கும் சுமூகமான முடிவினால் இரு மாநில பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வாக அமையும். இரு மாநிலத்திற்கும் நட்புக்கும் இது எதிர்கால பயனை அளிக்கும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
