“அவருடன் படம் பண்ணனும்கிறது என்னுடைய கனவாக இருந்தது, அவரது படங்களைப் பார்த்துத்தான் நான் வளர்ந்து வந்திருக்கிறேன்.” என்று கண்களில் மின்னலடிக்கச் சொல்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
இதோ அவருடன் டேராடூன் கிளம்பவேண்டும். அங்குதான் ரஜினியை வைத்துப் புதியபடம் பண்ணுகிறார். குலுமணாலியில் படப்பிடிப்பு.
“அவரது படத்தை என்றாவது டைரக்டு பண்ணுவேன் என நினைத்திருந்தேன் .அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நினைக்கவில்லை. ஒரு வருடத்துக்கு முன் அவரிடம் நான் கதை சொன்னபோது உடனே ஒப்புக்கொண்டுவிட்டார் “என்கிறார் சுப்பராஜ்.
இன்னொரு முக்கிய தகவல்.” இது அரசியல் படம் இல்லை!”