“நீங்க ஒண்ணும் நடிப்பை பொளந்து கட்ட வேணாம்,நாங்க சொல்றத மட்டும் நடிச்சா போதும்” என்று எங்களைக் கட்டுப்படுத்தினால் என்ன பண்ண முடியும்?”
நெஞ்சைப் பிளக்காத குறையாக வெம்புகிறார் பிரனீதா.
‘எனக்கு வாய்த்த அடிமைகள்,’ ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ ஆகிய படங்களைப் பார்த்திருப்பவர்களுக்கு பிரனிதா கட்டாயம் நினைவில் இருப்பார். அவருக்கு என்ன நேர்ந்ததோ மனதில் அதுநாள்வரை பொங்கிக் கொண்டிருந்ததை வழிய வழிய கொட்டி இருக்கிறார்,
“ஹீரோயின்களுக்கு முக்கியமில்லைங்க. இது நூத்துக்கு நூறு உண்மை.. டைரக்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டும் செய்தால் போதும்னு நினைக்கிறாங்க. சுதந்திரமாக செயல்படுவதை அனுமதிப்பதில்லை.
ஒரு படத்தில் நக்சலைட்டுக்கு மனைவியாக நடித்திருக்கிறேன். எனக்கு ஸ்லோ மோஷன் ஷாட். நல்லாவே இல்லை. என்னை ஸ்லோ மோஷன் ஷாட்டில் பார்க்க எனக்கே பிடிக்கவில்லை. என்கிறபோது மக்கள் எப்படி ரசிப்பாங்க. ஏழை சொல் சபை ஏறாதுன்னு சொல்வாங்க, அதுதான் நடக்கிது. நடிகைகள் வெறும் கிளாமர் பொம்மைகள், அவர்கள் திறமைகளை கொட்ட வேண்டியதில்லை என நினைக்கிறார்கள்.”என்கிறார் பிரனிதா.
சில பேர் கிளாமர் காட்டுனாலும் பார்ப்பதற்கு முடியலியே!