வாய் தவறி வந்து விழுந்த வார்த்தைகள் என்றாலும் அதில் உண்மை இருப்பதால்தானே மழுப்புகிற நிலை வந்திருக்கிறது.!
சவுந்தர்யா ரஜினி அப்படி ஒன்றும் பிழையான செய்தியை சொல்லிவிடவில்லை.
ஆர்வக்கோளாறு. படக்கென பந்தியில் வைத்து விட்டார். புதிய படத்துக்காக ரஜினி வீட்டிலிருந்து கிளம்பியபோது “மல்ட்டிபிள் ரோல்ஸ்” என்பதாக ரகசியத்தை சொல்லிவிட்டார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எதுவும் சொன்னாரா அல்லது தயாரிப்பு நிறுவனம் கடிந்து கொண்டதா என்பது தெரியவில்லை.
ரஜினிக்கு படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்கள் இருப்பதாக தொடக்கத்திலேயே வந்து விட்டால் சஸ்பென்ஸ் உடைந்து விட்டதாகத்தானே நினைப்பார்கள்.
உடனே சவுந்தர்யாவை கேட்டுக்கொள்ள அவரும்” நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.தலைவரின் வாழ்க்கையைப் பற்றி சொன்னேன்” என சமாளித்து விட்டார்.
அப்படியே கட்சியின் பெயரையும் வாய் தவறி சொல்லிடும்மா!