ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் நடிக்க மாட்டோமா என்கிற ஏக்கம் ஒரு காலத்தில் இருந்தது உண்மைதான்!
அவர் எப்போது கருத்து கந்தசாமியாகி பதிவுகள் போட ஆரம்பித்தாரோ அன்றே பாதிப்பேர் கழன்று கொண்டார்கள். சூப்பர் கதை சூப்பர் ஸ்டார் என சொல்லி சிலர் இவரிடம் சோதனைக்கூட எலிகளாகியது உண்டு.
கதை சொல்லுவதில் ஆர்கேவி மகா கெட்டிக்காரர் என்கிறார்கள்.
அண்மையில் இவரிடம் சிக்கி சிதைந்தது சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா!
ஆபிசர் என படம் எடுத்து டவுசரை கழட்டிவிட்டார்.
நாகார்ஜுனாவின் ரசிகர்கள் வர்மாவை ஒருவழி பண்ணி விட்டார்கள்.
தற்போது நாகார்ஜுனாவின் மகன் அகிலிடம் “வா சேர்ந்து படம் பண்ணலாம்” என்று கூப்பிட்டிருக்கிறார்.
“ஐயோ சாமி ஆளை விடுங்க நான் லண்டன் போகணும்.அங்கே எனக்கு ஷூட்டிங்.உங்க சோதனைக்கு எலி நானில்லை “என்று தப்பித்து இருக்கிறார்,
“என்ன இருந்தாலும் பெரிய டைரக்டர் ..இப்படி சொல்லி இருக்கனுமா?”என்றால் “என்னுடைய ரசிகர்களை நான் காப்பாத்தனும்ல” என்கிறார் அகில்.
புத்திசாலிப் புள்ள! தப்பிச்சிக்கிச்சு !!