நாடோடிகள் 2009இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். சமுத்திரக்கனியின் இயக்கத்தில் 2009 ல் வெளியான திரைப்படம்நாடோடிகள். இதில் சசிகுமார்,கருணாகரன்,அபிநயா,பவித்ரா,அனன்யா,கஞ்சா கருப்பு,விஜய்வசந்த்
உள்படபலர் நடித்திருந்தனர்.இப்படம் அப்போது பெரிய வெற்றியை பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், `நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி வருகிறது. இதில் சசிகுமார் – அஞ்சலி ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும்நடித்து வருகின்றனர். தேனி, மதுரை என தென் மாவட்டங்களில் நடந்து வந்த இதன் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்டதாக இப்படக்குழு அறிவித்துள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.இந்நிலையில்,இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகும் என இயக்குனர் ,நடிகர் சமுத்திரக்கனி தனது சமூக வலைதளபக்கத்தில் அறிவித்துள்ளார்.