பாராளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க பிஜேபியின் சதுரங்க வேட்டை படுவேகத்தில் நடக்கும். வடநாட்டில் சல்மான்கானை பிஜேபியின் பெருந்தலை சந்தித்திருக்கிறது. அடுத்து தமிழ்நாடுதான்!
இங்கு தமிழ்த் திரை உலக உச்சங்களை அமித்ஷா போன்ற தலைவர்கள் சந்தித்தால் இரண்டுகால செய்தியாகவே இருக்கும். ஏற்கனவே பிரதமர் மோடி சந்தித்து அடக்க ஒடுக்கமாக கைகளை கட்டிக்கொண்டு பவ்யமாக இருந்த படங்களை எல்லாம் பார்த்து விட்டார்கள்.
இதனால் மறுபடியும் ஒரு ரவுண்டு மோடி வரப்போவதாக பேசிக் கொள்கிறார்கள். மோடியின் ஜிக்ரி தோஸ்த் ரஜினி. இன்னும் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவில்லை.அவரை சந்திப்பது வழியாக காலா ரசிகர்களின் மனதில் பச்சக்கென ஒட்டிக்கொள்ள ஒரு வாய்ப்பு.
ஆனால் யாருக்கும் பிடி கொடுக்காமல் தனது இமேஜை மென்மேலும் உயர்த்திக்கொண்டு போகிறவர் தளபதி ,அண்மையில் ஆரவாரம் இல்லாமல் தூத்துக்குடி சென்று திரும்பியவர் விஜய். இவரை மறுமுறை சந்திப்பது வழியாக ஆதாயம் பெற இயலுமா என்கிற சிந்தனை பிஜேபி தலைமைக்கு இல்லாமல் போகுமா? அண்மைக்காலமாக எச்.ராசாவின் ஏடாகூடமான அறிக்கைகளை படிக்க முடியவில்லையே!
நடிகர்களை சரிக்கட்டும் வேலையில் பிஜேபி இறங்கவிருப்பதால் சங்கு ஊதுகிறவர்களை அடக்கி வைத்திருப்பதாக த் தெரிகிறது.