சூழ்நிலையின் கனம் தெரிகிறது.
சிம்புவின் எதிரில் பிஸ்டலுடன் நிற்கிறார் விஜயசேதுபதி.
இயக்குநர் மணிரத்னம் கையை உயர்த்துகிறார்.
மறுவினாடி பிஸ்டல் சீறுகிறது. அதிர்வுகளுடன் சிம்பு சாய்கிறார். காட்சி முடிகிறது,ஆங்கிலத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார் மணி. அவருக்கு திருப்தியாம்!
சிம்புவும் விஜயசேதுபதியும் அந்த இடத்தை விட்டு வெளியில் வருகிறார்கள்.
“என்ன சிம்புவ சுட்டுட்டோம்னு கெத்தா?” என்று கேட்கிறார் சிம்பு. குரலில் கோபமோ குதர்க்கமோ இல்லை.சற்றே குறும்பு!
விஜயசேதுபதியும் “சுடச்சுட முளைக்கிற பீனிக்ஸ் மாதிரி நீங்க ன்னு தெரியாதா ?”என்று சொல்ல இருவரும் ஜாலியாக இடம் பெயருகிறார்கள்.
நாம் கேள்விப்பட்ட இன்னொரு செய்தி சில வசனங்களை பேசுவதற்கு அரவிந்தசாமி மிகவும் தயங்கினாராம்.மணிரத்னம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அரவிந்தசாமி பேசவில்லை என்று தெரிகிறது.
விளைவு?
செக்கச் சிவந்த வானம் படம் வந்தால் தெரியும்!