“சேகர் எங்கே இருக்கிங்க?”
“வீட்டில்தான் இருக்கேன்” வழக்கம்போல பதில் வருகிறது எஸ்.வி.சேகரிடமிருந்து!
“ஏழு மலை,ஏழு கடல் தாண்டி ஒரு குகைக்குள்ள”என நாம் முடிப்பதற்குள் சேகரே “அங்க ஒருமரம் இருக்கும் அதுல ஒரு கிளி இருக்கும் கிளியின் வயித்துக்குள்ள உயிர் இருக்கும்கிற கதை மாதிரி என்னை தேடிட்டு இருக்காங்கன்னு சொல்ல வாரிங்களா” ? எனக் கேட்டு சிரிக்கிறார். “நான் எங்க போகப்போறேன் .இங்கதான் இருக்கேன், ஆஸ்பத்திரியில் இருக்கிற ஆந்தை குமாரைப் பார்த்து ஆறுதல் சொல்லிட்டு வந்தேன்”
“என்னதான் பிரச்னை சேகர்?”
“ஒண்ணுமில்ல. எதோ ஒரு பேப்பரை கையில வெச்சிருந்தா அதில் வந்திருக்கிற செய்திகளுக்கெல்லாம் நாம்ப பொறுப்பாக முடியுமா? மறுப்பும் சொல்லியாச்சு,மன்னிப்பும் கேட்டாச்சு.அந்த செய்திக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லேன்னு சொல்லியாச்சு. பெண்களை இழிவு படுத்துறவன் இந்த சேகர் இல்லே. ”
“உங்களை பிஜேபியில் இருந்து ஒதுக்கி வெச்சிட்டதாக தமிழிசை சொல்லிருக்காங்களே?”
“இவங்க என்னிக்கி சேத்து வெச்சிருந்தாங்க,நானூறு ஐநூறு கூட்டம்னு பேச வச்சிருந்தாங்க. இப்ப ஒதுக்கி வைக்கிறதுக்கு!” என சிரிக்கிறார் எஸ் வி.சேகர்.