வம்புக்கென வாயைச் சிலர் ஆரோக்கியமாக வளர்த்து வைத்திருப்பார்கள். சிலர் வாய் வெற்றிலை வாசம், சிலரது வாய் புகையிலை மணக்கும் .
கஸ்தூரியின் வாயில் வம்புதான் மணக்கும்.
சாமி 2 படத்தில் இவர் ஆடி இருக்கும் ஆட்டத்தைப் பற்றி சிலர் கமெண்ட் அடித்ததைப் பற்றி பொங்கி இருந்த இவர் பிரச்னையை விடுவதாக இல்லை.
போலீஸ் டிரஸ்சில் படம் எடுத்துப் போட்டு “நானும் போலீஸ்தான்! ஆனா சாமி இல்ல. சாதா” என பதிவிட்டிருக்கிறார்.
சும்மா இருந்த கொண்டைச்சேவலுக்கு தீனியைப் போடுவானேன்.அது மண்டையை ஆட்டிக்கிட்டுக் கொத்த வருவானேன்?