பணம் சேர்ப்பது மட்டும்தான் இலக்கு என்பது மனித இயல்பு. ஆனால் சேர்த்த பணத்தில் சிறிதளவு இல்லாதவர்க்கு, குறிப்பாக ஆதரவற்றவர்களுக்கு கொடுப்பது என்பது எல்லோர்க்கும் இருப்பதில்லை.
கோலிசோடா 2 இயக்குநர் விஜய் மில்டன் வித்தியாசமான முயற்சியில் இறங்கி இருக்கிறார். தனது படத்தின் GOLI SODA TWO என்கிற பெயரில் ஜி எஸ் டி என்கிற பெயரில் இரண்டு வேன்கள் வீதம் ஐந்து மாவட்டங்களில் பயணம் செய்யவிட்டிருக்கிறார்.
வெறும் விளம்பரம் அல்ல. அந்த வாகனத்தில் தாகம் தீர்க்கும் பானங்கள் இருக்கும் ,மதிய நேரத்தில் அந்த வேன் எங்கு நிற்குமோ அங்குள்ள ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும்.முடிவில் அந்த நகரத்தில் உள்ள முக்கியமான ஆதரவற்றோர் இல்லத்தில் தேவையான உதவிகளை செய்யும்.
இதற்கான வாகனத்தை சென்னையில் நடிகர் சூர்யா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கோவையை சேர்ந்த பசியாற சோறு அமைப்பை நடத்தி வருகிற ராஜசேது முரளி ,மதுரையை சேர்ந்த மூதாட்டி காந்திமதி ஆகியோருக்கு தேவையான உதவிகளை இயக்குநர் விஜய்மில்டன் வழங்கினார்.
அவசியமான இத்தகைய உதவிகளை மற்ற தயாரிப்பு நிறுவனங்களும் பின்பற்றினால் நல்லது
வழி காட்டி இருக்கிறார் விஜய் மில்டன்.