பக்கத்து வீட்டுக்காரன் ஓரக்கண்ணால் பார்த்தாலே கன்னத்தில் ஒரு இடி இடிப்பாள் அக்கா.” என்னடி அப்படி பார்க்கிறான் ? அவனோட சினேகமா? செருப்படி விழும்” என்று தங்கையைத் தட்டி வைப்பாள் .இது கிராமத்து வாசம். நகரத்தில் ‘பப்’ வாசம். சினிமாவில் “இதெல்லாம் ஒரு மேட்டரா, விடுப்பா!”
நடிகை அலியாபட் ரன்பீர் கபூர் நெருக்கம் ஊரெல்லாம் மணக்கிறது.
“கல்யாணம் பண்ணிப்பாங்கப்பா” –இது ஒரு தரப்பு.
“ம்ஹூம் ! கழண்டுக்கும்பா! இதெல்லாம் வயசுக் கோளாறு!”
சரி ..அந்தப் பொண்ணின் அக்கா பூஜா பட் என்ன சொல்றாங்க?
“என்னங்க இதெல்லாம் எங்கிட்ட கேக்குறீங்க…என்னுடைய பெர்சனல் லைப்பை பத்தி எங்கிட்ட கேக்குறது நியாயம். என் தங்கச்சியின் பெர்சனல் லைப்பைப் பத்தி என் கிட்ட கேக்கலாமா? சின்ன வயசு.மத்தவங்களை சந்தோஷப்படுத்துற சினிமாவில் இருக்கா!எத செய்யணும் எத செய்யக்கூடாதுங்கிறது அவளுக்குத் தெரியும். சின்னஞ்சிறிசுக அப்படித்தான் இருக்கும். விடுங்க!” என்கிறார்