சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘லிங்கா’ படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் தான் அடுத்த படம் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.ஆனால் தற்போது ரஜினியின் அடுத்த படத்தை இளம் இயக்குனர் அட்டகத்தி புகழ் ரஞ்சித் இயக்க இருக்கிறார்.இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பார் என்றும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு விரைவில் வெளியிடப்படும் எனவும் செய்திகள் வெளியாகி,கோடம்பாக்கத்தில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் அடுத்த படம் ஷங்கருடன் தான் என்று செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது ரஞ்சித் தான் இயக்குனர் என்ற செய்தி தமிழ் திரைப்பட உலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால்,இது குறித்து கலைப்புலி தாணு மற்றும் இயக்குனர் ரஞ்சித் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.ரஜினி வட்டாரமோ ஷங்கர்,முருகதாஸ்,ரஞ்சித் ஆகிய மூவரிடம் ரஜினி கதை மட்டுமே கேட்டுள்ளதாகவும் ,இது குறித்து ரஜினி மட்டுமே முடிவு செய்வார் என்கிறார்கள்.ரஜினி வாய் திறக்கும் வரையில் ரஜினி படம் பற்றிய வதந்திகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பது உறுதி!