இந்த வருஷம் தேர்தல் வருகிற மாதிரி தெரியல ரஜினியும் கட்சியின் பெயரை சொல்வார் என்கிற நம்பிக்கையும் இல்லை. ஆனால் அடுத்தடுத்து ரஜினி படம் பண்ணுவார் என்கிற செய்திக்கு மட்டும் குறைவு இல்லை.
கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் பல கேரக்டர்கள் பண்ணுகிறார் ரஜினி. இவருக்கு சரியான வில்லனாக விஜயசேதுபதி.சூப்பர் ஸ்டாரும் மக்கள் செல்வனும் மோதிக்கொள்கிற படம்.
“எப்படி வில்லனாக நடிக்க ஒத்துக் கொண்டார் சேதுபதி?”
“ரஜினி சார்,கார்த்திக் சுப்பராஜ் சார் இவங்க ரெண்டு பேர் படம்னதும் யோசிக்கவே இல்லை.ஓகே சொல்லிட்டேன்.
காரணம்?
நெறைய கத்துக்கலாம்.நான் இன்னும் கத்துக்கிற ஸ்டேஜ்லதான் இருக்கேன்.ரஜினிசாரின் அனுபவம் நமக்கு பாடமாக இருக்கும் ” என்கிறார் சேது.
சரி முருகதாஸ் கதை என்ன?
வெகு காலத்துக்கு முன்னாடி சொன்ன கதை, பொலிடிகல் சிச்சுவேஷனுக்கு இப்ப சரியாக இருக்கும். அதனால அந்த கதையை பண்ணலாம்னு ரஜினி நினைக்கிறாராம்.
தமிழ்நாடு அரசியலை வைத்து ஆயிரத்தெட்டு கதை. பண்ணலாம்,
பேசாமல் சினிமாவிலேயே இருந்திடுங்களேன் ரஜினி சார்!