மைனா,ஆள்,காடு,பட்டையை கெளப்பனும் பாண்டியா உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர் விதார்த். இவருக்கும் பழனியை சேர்ந்த வழக்கறிஞர் சிவானந்தம்-மணிமேகலை தம்பதிகளின் மகள் காயத்திரிதேவி க்கும் நேற்று மாலை பழனிமலை அடிவாரத்தில் உள்ள திருமணமண்டபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள் கலந்து கொண்டனர்.இதையடுத்து இவர்களின் திருமணம் அடுத்தமாதம் 11 ந்தேதி காலை திருப்பதியில் நடக்கிறது.திருமண வரவேற்பு 17 ந்தேதி மாலை சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடக்கிறது. இதில் திரையுலகினர் பலர் திரளாக பங்கேற்கின்றனர்.