‘காலா’ படத்தில் ரஜினியையே ஓவர் டேக் பண்ணியவர் வைஜயந்தி. சாரி ….ஈஸ்வரி ராவ்,
“அந்தப் பொண்ணு கே.ஆர்.விஜயா மாதிரியே இருக்காடா..சிரிப்புக் கூட அதே மாதிரிதான்டா!”என்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஈஸ்வரிராவுக்கு இப்படி ஒரு பாராட்டு. பாலு மகேந்திரா பட்டறை மாணவி.
இவருக்கு பெரிய நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்ததில்லையா?
“நல்லா கேட்டிங்களே ஒரு கேள்வி! சாதாரண படங்களில் சான்ஸ் கிடைக்கிறதே குதிரைக்கொம்பு. கிடைச்ச படங்களோடு திருப்தி பட்டுக்கணும்.நானும் பெரிய நடிகர்களுடன் நடிக்கணும்னு அப்பல்லாம் ஆசைப்பட்டதும் கிடையாது. கமல் சாரின் ‘விருமாண்டி ‘படத்தில் அபிராமி கேரக்டர்ல நடிக்கிறதுக்கு ஒரு சான்ஸ் வந்துச்சு, எப்படியோ மிஸ் ஆயிடுச்சி. காலா பட சான்ஸ் தம்பி ரஞ்சித் கொடுத்தது. எனக்கு ஜோடி ரஜினிசார்னதும் கதையும் கேட்கல.எதையும் கேட்கல. ஒத்துக்கிட்டேன் ” என்கிறார் ஈஸ்வரிராவ்,