இரை எடுத்த பசுமாடு சாவகாசமாக அசை போடுவதைப் போல ‘கேஷ்டிங் கவுச்’ விவகாரத்தை மென்று கொண்டிருக்கிற நேரத்தில்தான் இந்த பகீர் நியூஸ் குபீர் என்று குதித்து குத்தாட்டம் போடுது.!
“கலாசார நிகழ்ச்சி நடத்துறோம். நம்ம மாநிலத்தின் பெருமையை அமெரிக்கக்காரனுக்கு சொல்ல வேணாமா..? அதனால யு.எஸ். வா” எனச்சொல்லி ஐந்து தமிழ்,தெலுங்கு நடிகைகளை அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்று இருக்கிறார் கிஷன் என்கிற ஸ்ரீ ராஜ் சென்னப்படி.இவருக்கு ஹைதராபாத்தில் ஒரு பிரபல சினிமா கம்பெனியில் ப்ரொடக்ஷன் மானேஜர் வேலை என்பதால் அவரை நம்பிப் போய் மாட்டி இருக்கிறார்கள் ஐந்து அப்பாவி நடிகைகள்.
இதில் என்ன பரிதாபம் என்றால் அவர்கள் ‘பிரபலங்கள்’ என்பதுதான்!
வெளியில் சொன்னால் மானக்கேடு.மீடியாக்கள் மென்று தின்று துப்பி விடும்.
இந்த பயத்தினால் ஸ்ரீ ராஜ் சொன்னபடியெல்லாம் நடந்திருக்கிறார்கள், அந்த ஆளின் மனைவி சந்திரகலாதான் சட்டாம்பிள்ளை.தற்போது புருசனும் பொண்டாட்டியும் அமெரிக்க சிறையில்!
“பாஸ்போர்ட் விசா எல்லாம் எங்க கையில் இருக்கு.சொன்னபடி நடந்துக்க. உழைப்புக்கேத்த காசும் பை நிறைய தாரோம்.” என்று மிரட்டியே அடைத்து வைத்து இரண்டு அறைகளில் விபசாரத் தொழில் ஜோதிமயமாக நடந்திருக்கிறது. டூரிஸ்ட் விசா முடிந்ததும் நடிகைகளை திருப்பி இந்தியாவுக்கு அனுப்பி விட்டார்கள்.
நடிகைகளும் கங்கையில் நீராடினால் பாவம் காலியாகிவிடும் என்பது போல்சொந்த ஊர் வந்து வீட்டு பாத்ரூமில் நீராடி பாவத்தை கழுவி மறைத்திருக்கிறார்கள்.
ஆனால் அமெரிக்க போலீஸ்காரன் திரட்டிய ஆதாரங்களில் 70 காண்டம்களுடன் மாட்டிய ,டைரியில் ஐந்து நடிகைகளுக்கான வரவு செலவுக் கணக்குகளும் இருக்குப்பா,அதில் அவர்களின் பெயரும் அடக்கமய்யா!
என்ன செய்யப்போகிறார்கள் அந்த நடிகைகள்! கலைச்சேவை என்கிற போர்வையில் சிலர் வெளிநாடுகளில் இப்படித்தான் மாட்டிக் கொள்கிறார்கள்.